மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிளில் மோதி பெண் பலியானார்.
புதுச்சேரி
கடலூர் புதுப்பாளையம் முத்துக்குமரன் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மனைவி ஜெயசுந்தரி (வயது 45). இவர் புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள தனது மகளை பார்க்க வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு தனது மருமகன் அழகர் என்பவருடன் ரெட்டியார்பாளையத்தில் மெயின்ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது. தலையில் படுகாயம் அடைந்த அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், ஜெயசுந்தரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அழகர் கொடுத்த புகாரின்பேரில் கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.