மோட்டார் சைக்கிள் மோதி பெண் படுகாயம்
மணப்பட்டு சந்திப்பில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் சைக்கிள் மீது மோதியதில் பெண் காவலாளி படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாகூர்
முள்ளோடை அடுத்த வண்ணாங்குளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ் மனைவி கீதா (வயது 34). காவலாளியாக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக சைக்கிளில் புதுவை-கடலூர் மெயின் ரோடு மணப்பட்டு சந்திப்பில் சென்ற போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.