புதுச்சேரி
நாம் தமிழர் கட்சி செயலாளர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் விபத்துக்களை தடுக்க அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை நாம் தமிழர் கட்சி வரவேற்கிறது. கடந்த ஆட்சியில் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டபோது அனைவரும் ஹெல்மெட் வாங்கினர். அதன்பிறகு அந்த நடைமுறை திடீரென கைவிடப்பட்டது. எனவே அனைவருக்கும் இலவசமாக அரசு ஹெல்மெட் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.