'நிதி நிறுவனத்தில்ரூ.15 கோடி இழந்துள்ளோம்'

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ரூ.15 கோடி இழந்துள்ளதாக பொதுமக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

Update: 2023-08-30 16:25 GMT

காரைக்கால்

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ரூ.15 கோடி இழந்துள்ளதாக பொதுமக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீரக்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டுகள் சுப்பிரமணியன், நிதின்கவ்ஹால் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களிடம் மணீஷ் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, காரைக்காலில் பாரதியார் சாலை, திருநள்ளாறு சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசல், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், இடப்பிரச்சினை, சொத்து தகராறு போன்ற தனிப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் 19 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

ரூ.15 கோடி மோசடி

கூட்டத்தில், பிரதான கோரிக்கையாக, திருச்சியில் செயல்படும் எல்பின் நிதி நிறுவன மோசடி குறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள் சீனியர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்து கூறியதாவது:-

காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 150 பேர் எல்பின் நிதி நிறுவனத்தில், மொத்தம் ரூ.15 கோடி முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காரைக்கால் போலீசாரிடம் புகார்கள் அளிக்கப்பட்டதால், அதன் அதிபர் ரமேஷ் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தால், அதை ஏற்க மறுத்து, எங்களை 4 மணி நேரம் காத்திருக்க வைத்து அனுப்பிவிட்டனர்.. எனவே காரைக்கால் போலீசார், விரைவான நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்