"சிறந்த புதுச்சேரியை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்" - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

புதுச்சேரி சுகாதாரத்துறையில் உள்ள குறைபாடுகள் 3 மாதத்தில் சரிசெய்யப்படும் என புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.;

Update:2022-10-31 00:44 IST

புதுச்சேரி,

புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-

"பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்க வேண்டிய மருத்துவ சேவை தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சுகாதாரத்துறையில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் சரி செய்யப்படும்.

ஏற்கனவே ரூ. 5 கோடி மதிப்பீட்டில் ஆஞ்சியோகிராம் கருவி வாங்கப்பட்டிருக்கிறது. அது ஒன்றரை மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும். இதேபோன்று ஸ்கேன் கருவிகள் வாங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மருத்துவத்துறையினருடன் நாளை நான் கலந்தாலோசனை செய்ய இருக்கிறேன். அப்போது, என்னென்ன குறைபாடுகள் இருக்கின்றன என்பது குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டு 3 மாதங்களுக்குள் அனைத்தும் சரி செய்யப்படும். சிறந்த புதுச்சேரியை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்