வ.உ.சி. சிலைக்கு கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி மரியாதை

வ.உ.சி. சிலைக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2023-09-05 16:35 GMT

புதுச்சேரி

வ.உ.சி. சிலைக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிறந்த நாள் விழா

புதுச்சேரி அரசு சார்பில் சுதந்திர போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழருமான வ.உ. சிதம்பரனார் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சட்டசபை எதிரே பாரதிபூங்காவில் உள்ள அவரது சிலைக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், ஜான்குமார், கே.எஸ்.பி.ரமேஷ், பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி, லட்சுமி காந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க., பா.ஜ.க.

அ.தி.மு.க. சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் இணை செயலாளர் திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணை செயலாளர் நாகமணி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் துணைத்தலைவர் செல்வம், ரவிச்சந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிள்ளைமார் சங்கம்

அனைத்துலக முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பாக அதன் தலைவர் ஸ்ரீதர் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் துப்புரவு தொழிலாளர்களுக்கு மழை கோட்டு, 5 கிலோ அரிசி மற்றும் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் பா.ஜ.க. துணைத் தலைவர் ரவிச்சந்திரன், ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், முதலியார் பிள்ளைமார் சங்க பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் மதிவாணன், தியாகராஜன், தணிகை வேலு, ராஜா, பெண்கள் அமைப்பின் மாநில தலைவர் தமிழரசி, செயலாளர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்