மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு

முத்தியால்பேட்டை காமராஜர் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்கப்பட்டுள்ளது.;

Update:2023-07-14 21:08 IST

புதுச்சேரி

புதுச்சேரி முத்தியால்பேட்டை காமராஜர் உயர்நிலைப்பள்ளியானது மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான பெயர் பலகை திறக்கும் நிகழ்ச்சி இன்று பள்ளி வளாகத்தில் நடந்தது.

விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் தலைமை தாங்கி பெயர் பலகையை திறந்து வைத்தார். பின்னர் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்