அரசுத்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்

புதுவையில் அரசுத்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2023-08-17 22:27 IST

புதுச்சேரி

புதுவையில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அரசுத்துறைகளில் பணியாற்றும் 10 கண்காணிப்பாளர்கள், 3 உதவியாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி ஏற்கனவே பணியிடமாற்றம் செய்யப்பட்ட கண்காணிப்பாளர்கள் 3 பேரை உடனடியாக சம்பந்தப்பட்ட துறையில் இருந்து விடுவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்