வணிகவியல் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு

புதுவையில் வணிகவியல் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.;

Update:2023-07-22 23:18 IST

புதுச்சேரி

புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் அனைத்து பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்வித்துறை முதன்மை அதிகாரி அலுவலகத்தில் நடந்து வருகிறது.

அதன்படி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை 60 வணிகவியல் ஆசிரியர்களுக்கும், 9 பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. இந்த தகவலை துணை இயக்குனர் (நிர்வாகம்) வெர்பினா ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்