இடுபொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

வேளாண்துறை சார்பில் இடுபொருட்கள் தயாரிக்கும் பயிற்சி முகாம் நடைப்பெற்றது.

Update: 2023-08-25 17:24 GMT

திருபுவனை

புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பாக ஆத்மா திட்டத்தின் மூலம் மதகடிப்பட்டு பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் சிலுக்காரிப்பாளையத்தில் அங்கக இடுபொருட்கள் தயாரிக்கும் பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு மதகடிப்பட்டு வேளாண் அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார். ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி வரவேற்றார்.

விவசாயிகள் சுப்ரமணியம், தங்கவேலு ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு வகையான இயற்கை இடுபொடுட்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கினர். மேலும் பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், தேமோர் கரைசல், அமிர்த கரைசல், மீன் அமிலம் ஆகிய இடுபொடுட்களை விவசாயிகள் முன்னிலையில் செய்து காண்பித்தனர்.

முகாமில் மதகடிப்பட்டு, வாதானூர், திருவாண்டார்கோவில், திருபுவனை, கலிதீர்த்தாள்குப்பம், சன்னியாசிக்குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் பக்கிரி, புவனேஸ்வரி, ஆத்மா மேலாளர் சிரஞ்சீவி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்