கடலூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து நெரிசல்

முருங்கப்பாக்கம்-கடலூர் சாலையில் சீரமைப்பு பணிகளின் காரணமாக மீண்டும் போக்குவரத்த நெரிசல் ஏற்பட்டது.;

Update:2023-09-30 22:35 IST

புதுச்சேரி

புதுவை முருங்கப்பாக்கம்-கடலூர் ரோடு சந்திப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் குழாய்வெடித்து ரோட்டில் ஆறாக தண்ணீர் ஓடியது. அந்த இடத்தை தோண்டி குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. பின்னர் அங்கு சிமெண்டு கலவை மூலம் சாலை சீரமைக்கப்பட்டது. அந்த சீரமைப்பு பணிகள் நடந்தபோது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்று பாதையிலும் திருப்பிவிடப்பட்டன.

ஆனால் அந்த சீரமைப்பு சரியாக இல்லாததால் நேற்று இரவு மீண்டும் சிமெண்டு கலவை கொட்டி சாலை சீரமைக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த இடத்தில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் குறுகிய இடத்தில் கடலூர் நோக்கி செல்லும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக செல்ல அனுமதிக்கப்பட்டன.

இதன் காரணமாக முருங்கப்பாக்கம் சந்திப்பிலிருந்து மரப்பாலம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை 9 மணி அளவில் தடுப்புகள் விலக்கப்பட்டு போக்குவரத்து சீரானது.

Tags:    

மேலும் செய்திகள்