சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
புதுச்சேரியில் இன்று சுற்றுலா பயணிகள் அதிகம் குவிந்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரியில் இன்று சுற்றுலா பயணிகள் அதிகம் குவிந்தனர்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதே போல் இன்று புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கொரோனாவின் தாக்கம் முடிவடைந்து இயல்பு நிலைக்கு இந்தியா திரும்பி உள்ளதை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வரத்தொடங்கியுள்ளனர்.
நேற்று ஒய்ட் டவுன் பகுதிகளில் உள்ள சாலைகளில் வழக்கத்தை விட அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வலம் வந்தனர். இதனால் புதுவையில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் முழுவதும் நிரம்பி வழிந்தன.
விளையாடி மகிழ்ந்தனர்
புதுவை பாரதிபூங்கா, தாவரவியல் பூங்கா, கடற்கரை, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச், சின்ன வீராம்பட்டினம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பாரதிபூங்கா, தாவரவியல் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். பாண்டி மெரினா பீச், பழைய துறைமுகம் மற்றும் தலைமை செயலகம் எதிரே சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி விளையாடினர்.
புதுச்சேரி வந்த சுற்றுலா பயணிகள் நகரின் ஒய்ட் டவுன் பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் வரைந்துள்ள ஓவியங்கள் மற்றும் தலைவர்களின் சிலைகள் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். புதுச்சேரியில் இன்று சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர்