நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தொடர் விடுமுறை எதிரொலியாக நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். படகு சவாரி, உணவு மூலம் ரூ.60 லட்சம் வசூலானது.;

Update:2023-10-02 20:54 IST

அரியாங்குப்பம்

தொடர் விடுமுறை எதிரொலியாக நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். படகு சவாரி, உணவு மூலம் ரூ.60 லட்சம் வசூலானது.

தொடர் விடுமுறை

புதுவையில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று நோணாங்குப்பம் படகு குழாம் ஒன்று. புதுவைக்கு சுற்றுலா வருபவர்கள் இங்கு படகு சவாரி செய்ய அலாதி பிரியம் கொள்வார்கள். படகுசவாரி செய்தபடியே பாரடைஸ் பீச்சுக்கு சென்று பொழுதை கழிப்பார்கள்.

இந்தநிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை காரணமாக புதுவை மாநிலத்தில் இன்று உள்ளூர் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவற்றில் நோணாங்குப்பம் படகு குழாமில் படகு சவாரி செய்வதற்காக ஏராளமானோர் வந்தனர். சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து கடலில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

ரூ.60 லட்சம் வசூல்

சுற்றுலா பயணிகள் வருகை எதிரொலியாக படகுகளும் இடைவிடாது இயக்கப்பட்டன. சனி, ஞாயிறு, காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை காரணமாக படகு குழாமில் ரூ.30 லட்சம், பேரடைஸ் பீச்சில் உள்ள உணவகத்தில் 3 நாட்களில் ரூ.30 லட்சம் வசூலாகி உள்ளது.

சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் அருகில் உள்ள தனியார் பெட்ரோல் நிலையத்திலும், பழைய சுண்ணாம்பு ஆறு பாலத்தின் மீதும் நீண்ட வரிசையில் நிறுத்தி வைத்தனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்