திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் மத்திய மந்திரி சாமி தரிசனம்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் மத்திய மந்திரி புருஷோத்தம் ரூபலா சாமி தரிசனம் செய்தார்.
திருநள்ளாறு
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற அரசுவிழாவில் கலந்துகொள்ள நேற்று மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை மந்திரி புருஷோத்தம் ரூபலா வந்திருந்தார்.
அவர் காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று காலை குடும்பத்தோடு சென்று சாமி தரிசனம் செய்தார். மேலும் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், தர்ப்பாரண்யேஸ்வரர், அம்பாள் உள்ளிட்ட சாமிகளை தரிசனம் செய்தார். இந்த நிகழ்வின்போது மத்திய இணை மந்திரி முருகன், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திரபிரியங்கா ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக மத்திய மந்திரிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.