தொழிற்சாலையில் தாமிர கம்பி, மோட்டார் திருட்டு
தொழிற்சாலையில் தாமிர கம்பி, மோட்டார் திருடிய ஊழியர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
புதுச்சேரி
பெரியகாலாப்பட்டில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தாமிர கம்பிகள் மற்றும் புதிய மோட்டார் திருடு போயிருந்தது. இதுகுறித்து தொழிற்சாலை மேலாளர், அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, தொழிற்சாலையில் பணிபுரியும் பெரிய காலாப்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்த சசிக்குமார் (வயது 35), பிள்ளைச்சாவடி திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெகதீசன் (36) ஆகியோர் திருடியது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிக்குமார், ஜெகதீசன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.