மணல் கடத்திய வாலிபர் கைது

மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-05 16:09 GMT

பாகூர்

பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் குருவிநத்தம் தூக்குப்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பாகூர் பங்களா வீதியை சோர்ந்த ஸ்டாலின் (வயது 22) என்பவர் மோட்டார் சைக்கிளில் 5 மூட்டை மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளையும், மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்