காவலாளி மயங்கி விழுந்த சாவு
புதுவை குருசுக்குப்பத்தில் நோபாளத்தைச் சேர்ந்த காவலாளி சைக்கிளில் செல்லும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.;
புதுச்சேரி
புதுவை குருசுக்குப்பத்தை சேர்ந்தவர் டிக்காராம் ஆச்சார்யா (வயது 33). நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட இவர் அரவிந்தர் ஆசிரமத்தில் காவலாளியாக வேலைசெய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று டிக்காராம் ஆச்சார்யா பணியை முடித்துவிட்டு சைக்கிளில் வாழைக்குளம் பகுதியில் சென்றபோது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே டிக்காராம் ஆச்சார்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.