ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தன.

Update: 2023-10-21 17:30 GMT

திருநள்ளாறு

நாடு முழுவதும் ஆயுத பூஜை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. காரைக்கால் மாவட்டத்திற்கு தமிழக பகுதிகளான ஓசூர், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாடப்பட உள்ள நிலையில் காரைக்கால் மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்திற்கு முழுவதும் 30 டன் பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயத்தில் பூக்களின் விலை கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், பல மடங்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட செவ்வந்திப்பூ தற்போது 300 ரூபாய்க்கும், ரோஜாப்பூ 80 ரூபாயில் இருந்து 300 ரூபாய்க்கும், மல்லிகைப்பூ 300 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய்க்கு என 5 மடங்கு விலை உயர்ந்துள்ளது. பூக்களின் விலை மேலும் உயரக்கூடும் என்பதால், தற்போது வணிக நிறுவனங்கள், கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் விலையையும் பொருட்படுத்தாமல் பூக்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்