பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதிகபட்சமாக மல்லிகை பூ கிலோ ரூ.800-க்கு விற்பனை ஆனது.

Update: 2023-09-16 17:49 GMT

புதுச்சேரி

விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதிகபட்சமாக மல்லிகை பூ கிலோ ரூ.800-க்கு விற்பனை ஆனது.

விநாயகர் சதுர்த்தி விழா

புதுச்சேரி நேருவீதி பெரிய மார்க்கெட்டுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், புதுவை சுற்று வட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நாள்தோறும் பூக்களின் வரத்து, தேவையை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம்.

இந்துக்களின் முக்கிய பண்டிக்கைளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால் புதுவை நேரு வீதியில் உள்ள பெரிய மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

கிடுகிடு உயர்வு

அதன்படி கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.300 விற்பனை செய்யப்பட்ட மல்லிகை விலை உயர்ந்து நாளை கிலோ ரூ.800-க்கு விற்பனை ஆனது. அதேபோல் மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. அதன் விவரம் கிலோ கணக்கில் (பழைய விலை அடைப்புகுறிக்குள் காட்டப்பட்டுள்ளது) வருமாறு:-

கனகாம்பரம்- ரூ.500 (ரூ.200), முல்லை-ரூ.700 (ரூ.160), அரளி-ரூ.300 (ரூ.100), ரோஜா-ரூ.120 (ரூ.60), சம்பங்கி- ரூ.200 (ரூ.50), கேந்தி ரூ.30-க்கு விற்பனை ஆனது. மேலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பூக்கள் விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்