மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

கோவில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2023-09-13 19:30 IST

புதுச்சேரி

கோவில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மூதாட்டி

புதுச்சேரி புதிய பஸ்நிலையம் அருகே ராஜா நகரில் ஸ்ரீராஜகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா இ்ன்று காலை நடந்தது. விழாவில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி புதுவையில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்களும் கலந்து கொண்டனர். இதில் அருத்ததிபுரம் முதல் தெருவை சேர்ந்த நாகம்மாள் (வயது 68) கலந்து கொண்டார்.

விழாவில் கோவில் புனிதநீர் ஊற்றும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் பக்தர்கள் கோவிலின் உள்ளே சென்று சாமிதரிசனம் செய்தனர். அப்போது நாகம்மாளும் கோவிலின் உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார்.

வலைவீச்சு

பின்னர் இது குறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மேலும் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்