மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல் சீற்றத்தினால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
மரக்காணம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் இன்று காலை முதல் மாலைவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் லேசான மழை பெய்தது. மேலும் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டு கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதன் காரணமாக மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. விசைப்படகு, நாட்டு படகுகளில் கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன. மேலும் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்