விபசார பெண் புரோக்கர் கைது

புதுவை காராமணிக்குப்பம் அருகே வீட்டில் விபசாரம் நடத்திய பெண் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-10-02 22:35 IST

புதுச்சேரி

புதுச்சேரி காராமணிக்குப்பம் மாரியம்மன் நகர் மூவேந்தர் வீதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக உருளையன்பேட்டை போலீசுக்கு தகவல் வந்தது. அதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட அழகியை மீட்டு காப்பத்தில் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் அங்கு ஆணுறை பாக்கெட்டுகள், செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து போலீசார் விபசார பெண் புரோக்கரான சித்ரா (வயது34) என்பவரை கைது செய்தனர். மேலும் சித்ரா மீது புதுவையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் விபசார வழக்கு இருப்பதும் தெரியவந்தது. பின்னர் கைதான சித்ரா நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்