முன்பட்ட குறுவை நெல் அறுவடை மும்முரம்

அம்பகரத்தூர், நெடுங்காடு பகுதியில் முன்பட்ட குறுவை நெல் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல்நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-25 16:31 GMT

காரைக்கால்

அம்பகரத்தூர், நெடுங்காடு பகுதியில் முன்பட்ட குறுவை நெல் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல்நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல் அறுவடை

காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர், செல்லூர், சேத்தூர், நெடுங்காடு பகுதியில் சுமார் 900 எக்டேரில் முன்பட்ட குருவை நெல் கடந்த மே மாதம் சாகுபடி செய்யப்பட்டது. ஆழ்துளை கிணறு மூலம் பாசனம் செய்யப்பட்டது.

தற்போது நெற்பயிர் விளைந்துள்ள நிலையில் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வேலையாள் பற்றாகுறை காரணமாக நெல் அறுவடை எந்திரம் மூலம் அறுவடை பணி நடந்து வருகிறது. ஒரு எக்டேருக்கு 60 முதல் 70 மூட்டைகள் வரை நெல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கொள்முதல் நிலையம்

கடந்த ஆண்டு காரைக்கால் மாவட்டத்தில் போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை புதுச்சேரி அரசு திறக்காததால், தனியார் வியாபாரிகளிடம் விவசாயிகள் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டது.

எனவே இந்த ஆண்டாவது தேவையான இடங்களில் கொள்முதல்நிலையங்களை திறந்து இந்திய உணவுக்கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். நெல் கொள்முதலின் போது, ஈரப்பதம் அளவை கூட்டி வழங்க வேண்டும். அப்போதுதான், விவசாயிகள் செலவு செய்த பணத்தை எடுக்க முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்