குடிசை வீடு எரிந்து நாசம்

Update: 2023-03-03 18:19 GMT

பாகூர்

கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு தெற்குவீதியை சேர்ந்தவர் சங்கர். அவரது மனைவி பத்மா (வயது 45). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பத்மா மீன் வியாபாரம் செய்து வந்தார். இன்று வழக்கம்போல் பத்மா வேலைக்கு சென்றார். அப்போது திடீரென வீடு தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பாகூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்