மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு

நெட்டப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-12-29 16:42 GMT

பாகூர்

நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் பள்ளத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி சிவமணி (வயது 43) சம்பவத்தன்று இரவு ஏரிப்பாக்கம் கடை தெருவிற்கு சென்று விட்டு கடலூர் ரோடு வழியாக வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது அந்த வழியாக வந்த விழுப்புரம் மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தை சே்ாந்த முத்துகிருஷ்ணன் (24) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் சிவமணி மீது மோதியது. இதில் சிவமணி மற்றும் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த முத்துகிருஷ்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் இருவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முத்துகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். சிவமணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்