குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

குளத்தில் கால் கழுவ சென்றபோது முழ்கி வாலிபர் பலி இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-11-08 15:53 GMT

நெட்டப்பாக்கம்

நெட்டப்பாக்கம் அருகே சூரமங்கலம் காலனியை சேர்ந்த பரந்தாமன் மகன் பற்குணன் (வயது 31). இவர் சிறு வயது முதலே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பற்குணன், திடீரென வீட்டில் இருந்து மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே இன்று காலை சூரமங்கலம் மெயின்ரோட்டில் உள்ள குளத்தில் பற்குணன் பிணமாக மிதந்தார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மடுகரை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குளத்திற்கு கால் கழுவ சென்றபோது அவர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்