கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

லாஸ்பேட்டையில் கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-12-01 22:52 IST

புதுச்சேரி

லாஸ்பேட்டை சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராம்குமார் (வயது 33). எலக்ட்ரிக்கல் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். அவரது மனைவி ஹேமலதா (32). ஆசிரியர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் சிவராம்குமாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் பிரச்சினையில் சிக்கியுள்ளார். நேற்று முன்தினம் காலை ஹேமலதா வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த சிவராம்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்