மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது

நெட்டப்பாக்கத்தில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசாா் கைது செய்தனா்.;

Update: 2022-10-21 13:50 GMT

நெட்டப்பாக்கம்

நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் கல்மண்டபம் பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர் ஏரிப்பாக்கம் பகுதியை பழைய காலனியை சேர்ந்த புகழ் என்ற புகழேந்தி (வயது 22) என்பது தெரியவந்ததும், கஞ்சா பொட்டலங்களை மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்