மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது

புதுச்சேரியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-15 17:46 GMT

புதுச்சேரி

புதுவையில் கஞ்சா விற்பனையை ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் லாஸ்பேட்டை பெத்துசெட்டிப்பேட்டை மைதானத்தில் மாணவர்கள், சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை மடக்கினர். விசாரணையில் அவர் மேஜர் சரவணன் நகர் தமிழ்ஒளி வீதியை சேர்ந்த சிவசக்தி என்ற கொக்கி சிவா (வயது 18) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்