மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது

காரைக்காலில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-08-10 22:33 IST

கோட்டுச்சேரி

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் தலைமையில் போலீசார் கோட்டுச்சேரி அருள்பிள்ளை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 24), பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 710 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்