அரசுப்பள்ளி உள்ளே ஆசிரியர்களின் மோட்டார் சைக்கிள்கள்
தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளே ஆசிரியர்களின் மோட்டார் சைக்கிள்களால் இடையூறு ஏறப்பட்டுள்ளது.;
அரியாங்குப்பம்
தவளக்குப்பத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். அந்த பள்ளி உள்ளே துணை முதல்வர் அலுவலகத்திற்கு எதிரே ஆசிரியர்களின் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் வளாகத்திற்கு உள்ளே வரும் மாணவர்களும், துணை முதல்வரை சந்திக்க வரும் பெற்றோர்களும் சிரமப்பட்டு வருகின்றனர். பள்ளி வளாகத்தில் ஏராளமான இடவசதி இருப்பதால் ஆசிரியர்களின் மோட்டார் சைக்கிளை மாணவர்களுக்கு இடையூறு இல்லாதபடி நிறுத்தவேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.