ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு

காரைக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கலெக்டர் குலோத்துங்கன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.;

Update:2023-08-30 21:51 IST

காரைக்கால்

காரைக்கால் வடக்கு தொகுதியில் அமைந்துள்ள திருநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கலெக்டர் குலோத்துங்கன் இன்று ஆய்வு மேற்கொண்டார். சுகாதார நிலையத்தை முழுவதையும் சுற்றிப் பார்த்த கலெக்டர், தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்றும், நோயாளிகள் அமர இருக்கை வசதிகள், போதிய மருந்து, மாத்திரைகள் உள்ளனவா? என்பது குறித்தும் அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் நோயாளிகளை காக்க வைக்காமல் உடனுக்குடன் சிகிச்சை அளிக்குமாறும், டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த நேரத்திற்கு பணிக்கு வர வேண்டும் என்றும் கலெக்டர் அறிவுறுத்தினார். நோயாளிகள் வருவதற்கு ஒரு வழி சிரமமாக உள்ளதாக டாக்டர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், சுகாதார நிலையத்தின் பின்புறமாக தனியாக ஒரு வழி ஏற்படுத்தி கேட் அமைத்து கொடுக்க பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் சிதம்பரநாதனை கலெக்டர் கேட்டுக் கொண்டார். ஆய்வின் போது டாக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்