புதுச்சேரியில் அலைசறுக்கு போட்டிகள்

புதுச்சேரியில் அலைசறுக்கு போட்டிகள் 2 நாட்கள் நடைபெறும் என அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.;

Update:2023-07-26 22:43 IST

புதுச்சேரி

புதுவை சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் இந்திய அலைச்சறுக்கு சம்மேளனம் ஒருங்கிணைந்து வருகிற 29 மற்றும் 30-ந்தேதிகளில் புதுவை தலைமை செயலகத்துக்கு எதிரில் அலைச்சறுக்கு போட்டிகளை மாலை 4.30 மணிக்கு நடத்துகிறது. இதில் புதுவையை சேர்ந்த அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்கள் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச அலைச்சறுக்கு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினையும் பெறுகின்றனர்.

இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் அலைச்சறுக்கு விளையாட்டிற்கு சிறந்த 3 இடங்களில் புதுச்சேரியும் ஒன்றாகும். அலைச்சறுக்கு போட்டி உள்ளூர் வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்த போட்டியானது உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு அரிய வியக்கத்தக்க விளையாட்டை காணக்கூடிய சிறந்த அனுபவமாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்