புதுச்சேரி கதிர்வேல் சாமி ஆலயத்தில் சூரசம்ஹார விழா - முதல்-மந்திரி ரங்கசாமி பங்கேற்று சாமி தரிசனம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்வில் இன்று ஆட்டுக்கிடா வாகனத்தில் கதிர்வேல் சாமி எழுந்தருளினார்.;

Update:2023-02-26 17:45 IST

புதுச்சேரி,

புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள கதிர்வேல் சாமி ஆலயத்தில் சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சூரசம்ஹார உற்சவ விழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்வில் இன்று ஆட்டுக்கிடா வாகனத்தில் கதிர்வேல் சாமி எழுந்தருளினார்.

இந்த சூரசம்ஹார விழாவில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் புதுச்சேரி மற்றும் அதன் சுட்டுவட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து கதிர்வேல் சாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்