தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

புதுச்சேரியில் தேசிய மனநல திட்டம் சார்பில் சர்வதேச தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-09-10 15:54 GMT

புதுச்சேரி

புதுவை அரசின் தேசிய மனநல திட்டம் சார்பில் சர்வதேச தற்கொலை தடுப்பு மாதத்தை முன்னிட்டு தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் சுகாதாரத்துறை அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கியது. ஊர்வலத்தை சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, துணை இயக்குனர் ரகுநாதன் ஆகியோர் தொடங்க ிவைத்தனர். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தில் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து தற்கொலை தடுப்பு சம்பந்தமாக அரசு ஆஸ்பத்திரியில் நடந்த கருத்தரங்கை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி கருணாநிதி, மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மனநல திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் கெஜலட்சுமி தற்கொலை தடுப்பு முறைகள், அவற்றை எப்படி கையாளுவது என்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். முடிவில் டாக்டர் உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்