ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

புதுவை- கடலூர் சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகில் நின்று கொண்டிருந்த நபர் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-18 18:19 GMT

புதுச்சேரி

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி இன்று மாலை 6.35 மணிக்கு ரெயில் வந்தது. அப்போது புதுவை- கடலூர் சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகில் நின்று கொண்டிருந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென்று ரெயில் முன் பாய்ந்தார். இதில் ரெயிலில் அடிபட்டு அந்த நபர் தலை துண்டித்து பரிதாபமாக இறந்து போனார்.

இதை பார்த்து அப்பகுதியில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த உருளையன்பேட்டை போலீசார் விரைந்து சென்று தண்டவாளம் அருகே பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இதேபோல் வாணரப்பேட்டை ரெயில்வே கேட் அருகே வாலிபர் ஒருவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்