1,500 ரூபாய்க்காக பள்ளி மாணவி தற்கொலை

Update:2022-06-22 20:40 IST

அரியாங்குப்பம்

வீட்டில் இருந்த 1,500 ரூபாய் மாயமானது குறித்து பெற்றோர் விசாரித்ததால் பள்ளி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பணம் மாயம்

புதுச்சேரி தவளக்குப்பத்தை அடுத்த டி.என்.பாளையம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் தர்மன் (வயது36). இவரது மகள் மேனஸ்ரீ (வயது 16). திருவள்ளுவர் பள்ளியில் பிளஸ்-1 முடித்துள்ளார். மகன் பரணிதரன் (வயது 13). 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மதியம் தர்மன் தனது மனைவி செண்பகத்திடம் வீட்டில் இருந்த பணம் ரூ.1,500-ஐ காணவில்லை என கேட்டார். தனக்கு தெரியவில்லை என அவர் கூறியதாக தெரிகிறது.

இதுபற்றி மகள் மேனஸ்ரீயிடம் இருவரும் விசாரித்துள்ளனர். அதற்கு அவர் எந்த பதிலும் சொல்லவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து தர்மனும், அவரது மனைவியும் வீட்டிற்கு அருகே ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர்.

தூக்கில் தொங்கினார்

பின்னர் மாலையில் வீட்டுக்கு வந்த போது கதவு மூடி இருந்தது. கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்ததில் கூரையில் புடவையால் தூக்குப்போட்டு மேனஸ்ரீ தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவரை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மேனஸ்ரீ இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1,500 ரூபாய் பணம் காணாமல் போனது தொடர்பாக பெற்றோர் விசாரித்த நிலையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் தவளக்குப்பம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்