4 வழிச்சாலையால் தவிக்கும் மாணவர்கள்

திருவண்டார்கோவிலில் 4 வழிச்சாலையால் மாணவர்கள் சாலையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.;

Update:2023-08-24 23:05 IST
4 வழிச்சாலையால் தவிக்கும் மாணவர்கள்

திருபுவனை

விழுப்புரம் - நாகை இடையே 4 வழிச்சாலையின் ஒரு பகுதியாக விழுப்புரம் - புதுச்சேரி சாலை விரிவாக்க பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விபத்துகளை தடுக்கும் வகையில் சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் சாலையின் ஒருபுறம் இருந்து மற்றொருபுறம் செல்ல வேண்டுமென்றால் நீண்ட தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது.

இந்தநிலையில் திருவண்டார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாலையின் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறம் கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். ஒரு சில மாணவர்கள் சாலையின் நடுவே உள்ள தடுப்புகளை தாண்டி ஆபத்தான முறையில் சாலையை கடந்து செல்கின்றனர். பிற மாணவர்கள் நீண்டதூரம் சுற்றிச்செல்கின்றனர். தினந்தோறும் மாணவர்கள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே சாலையை பாதுகாப்பாக கடந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்