அதிநவீன சலவை நிலையம்

புதுவை ரெட்டியார்பாளையத்தில் அதிநவீன சலவை நிலையத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்;

Update:2023-07-09 21:07 IST

புதுச்சேரி

ரெட்டியார்பாளையம் மெயின்ரோட்டில் பேப்ரிக்கோ என்ற பெயரில் உலகத்தரத்தில் அதிநவீன எந்திரங்கள் கொண்ட சலவை நிலையம் மற்றும் இஸ்திரி சேவை மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும் திறந்து வைத்தார். இதில் தொகுதி எம்.எல்.ஏ. சிவசங்கர், பேப்ரிக்கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நீல், சலவை நிலைய உரிமையாளர் ஆனந்தராஜ், சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சலவை நிலையம் குறித்து உரிமையாளர் ஆனந்தராஜ் கூறுகையில் 'வீட்டில் இருந்தே செல்போன் மூலம் உணவு ஆர்டர் செய்வது போல், நமது வீட்டில் உள்ள துணிகளை குறிப்பிட்ட நேரத்தில் சலவை செய்து வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படும் புதிய முறையை இந்த நிறுவனம் செய்துள்ளது. இதற்காக வெளிநாட்டில் இருந்து அதிநவீன எந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. பேப்ரிக்கோ என்ற ஆப் செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் மூலம் சலவை செய்ய வேண்டிய துணிகளை பதிவு செய்தால் அதனை எங்களது ஊழியர்கள் வீட்டிற்கு சென்று துணிகளை வாங்கி வந்து சலவை செய்து இஸ்திரி செய்யப்பட்டு மீண்டும் வாடிக்கையாளர்களிடம் கொடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்