மாநில அளவிலான 'நீட்' தரவரிசை பட்டியல்

புதுவையில் மாநில அளவிலான ‘நீட்’ தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2023-07-05 16:06 GMT

புதுச்சேரி

புதுவை மாநில அளவிலான 'நீட்' தேர்வு தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு

மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த நீட் தேர்வின் முடிவுகள் அகில இந்திய அளவில் கடந்த மாதம் 13-ந்தேதி வெளியிடப்பட்டது. மாநிலம் தோறும் நீட் தேர்வுகளை எழுதியவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண் குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை அந்தந்த மாநிலங்களுக்கு கொடுத்துள்ளது. இதேபோல் நீட் தேர்வு முடிவுகளை புதுவை அரசும் பெற்றுள்ளது.

இந்த தரவரிசை பட்டியலை புதுவை சுகாதாரத்துறை நேற்று இணையதளத்தில் (https://health.py.gov.in) வெளியிட்டது. இந்த பட்டியலில் தேர்வு எழுதிய 5 ஆயிரத்து 797 மாணவ, மாணவிகளின் பெயர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், அகில இந்திய அளவில் அவர்கள் எத்தனையாவது இடம் பெற்றுள்ளனர் என்பது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்

இந்த பட்டியலில் மாணவர் அசோக்குமார் 700 மதிப்பெண்களுடன் மாநிலத்தில் முதல் இடத்தையும், ஜெயசூர்யா 695 மதிப்பெண்களுடன் 2-வது இடத்தையும், கிஷம் 695 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருக்கும்பட்சத்தில் இதுதொடர்பாக சுகாதாரத்துறைக்கு 10 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்