புனித ஆரோக்கிய அன்னைஆலய திருவிழா கொடியேற்றம்
அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ந்தேதி தேர்பவனி நடக்கிறது.;
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ந்தேதி தேர்பவனி நடக்கிறது.
கொடியேற்றம்
அரியாங்குப்பத்தில் பிரசித்திபெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 333-வது் ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதையொட்டி, பூஜை செய்யப்பட்ட கொடியும், முதல் முறையாக அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் ஆரோக்கிய அன்னையும் கோவில் உள் வளாகத்தில் உலா வந்தது. பின்னர் காலை 7.40 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. இதில் புதுவை வட்டார முதன்மை குரு ரொசாரியோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருப்பலி நடத்தினார். தொடந்து கொடியேற்றி வைத்தார்.
10-ந்தேதி தேர் பவனி
கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பங்குத்தந்தை அந்தோணிரோச் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் பங்கு நிர்வாக குழு பொறுப்பாளர்கள் ரெனேலூர்துசாமி, அந்தோணிராஜ், மில்கி, பங்கு மக்கள், தன்னார்வலர்கள் குழு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நவ நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு திருப்பலி நடக்கிறது. அன்னையின் பெருவிழாவான வருகிற 10-ந் தேதி ஆடம்பர தேர் பவனி நடக்கிறது.