திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

Update: 2022-10-25 17:34 GMT

காரைக்கால்

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இ்ன்று தென்பட்டது. சூரிய கிரகணத்தின் போது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சைவ மற்றும் வைணவ கோவில்களில் நடை மூடப்பட்டு இருந்தன. கிரகணம் முடிந்த பின்னர் மாலை 6.30 மணிக்கு மேல் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் உலக புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் சூரிய கிரகண நேரத்திலும் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கிரகணம் முடிந்த பின்னர் கோவிலில் இருந்து அஸ்திர தேவர் பிரம்ம தீர்த்த குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்று. பின்னர் மூலவர் தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வரர் உள்ளிட்ட சாமிகளுக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருநள்ளாறு கோவிலில் சூரிய கிரகணத்திலும் நடை திறக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது, இந்த திருத்தலத்தில் மூலவராக இருப்பவர் தர்பாரண்யேஸ்வரர் சுவாமி ஆகும். தர்ப்பை வனத்தில் சுயம்பு மூர்த்தியாக தர்பார்னேஸ்வரர் சாமி உருவானதால் இக்கோவிலுக்கு கிரகண தோஷம் கிடையாது என்பது ஐதீகம். இதனால் சூரிய கிரகணத்திலும் திருநள்ளாறு கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்