சிறப்பு இருதய பரிசோதனை முகாம்

காரைக்காலில் நடந்த சிறப்பு இருதய பரிசோதனை முகாமில் 300 பேர் பயனடைந்தனர்.

Update: 2023-07-15 16:05 GMT

காரைக்கால்

காரைக்காலில் நடந்த சிறப்பு இருதய பரிசோதனை முகாமில் 300 பேர் பயனடைந்தனர்.

இருதய பரிசோதனை முகாம்

காரைக்கால் தனியார் ஆஸ்பத்திரிகள் சார்பில், சிறப்பு இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மூர்த்தி தலைமையில் இன்று காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் முதன் முறையாக இருதய பரிசோதனை முகாம் நடந்தது.

300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, சிறப்பு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. முகாமை கலெக்டர் குலோத்துங்கன் தொடங்கி வைத்தார்.

மற்ற நோய்க்கும் முகாம்

அப்போது அவர் பேசுகையில்,''மிசோரம் மாநிலத்தில் நான் கலெக்டராக பணிபுரிந்தபோது, இதுபோன்ற சிறப்பு இருதய பரிசோதனை முகாமை நடத்தினேன். இது அங்குள்ள பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மீண்டும் இதுபோன்ற முகாம்களை நடத்தவேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். மிசோரமில் டாக்டர் மூர்த்தி 100-க்கும் மேற்பட்டோருக்கு ஆஞ்சியோ மற்றும் இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அதை கருத்தில்கொண்டு அவரிடம் காரைக்காலிலும் அது போன்ற ஒரு சிறப்பு முகாமை நடத்த கேட்டபோது, அவர் எந்தவித தயக்கமும் இன்றி ஒப்புகொண்டார். அதன்படி, இந்த சிறப்பு முகாம் நடக்கிறது. இருதய நோய் உள்ளவர்கள் அறுவை சிகிச்சை வசதிக்கு ஏற்பாடு செய்யப்படும். இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) முகாம் நடைபெறவுள்ளது. அடுத்ததாக மற்ற நோய்களுக்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்