சிறுதானிய உணவு திருவிழா

காரைக்கால் காமராஜர் கல்வியியல் கல்லூரியில் சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது.;

Update:2023-03-20 23:49 IST

காரைக்கால்

2023-ம் ஆண்டு சிறுதானியங்கள் ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் பெட்காட் நுகர்வோர் அமைப்பு சார்பில் காரைக்கால் பெருந்தலைவர் காமராஜ் கல்வி கல்லூரியில் சிறுதானியங்கள் உணவு திருவிழா நடைபெற்றது. விழாவை மாவட்ட துணை கலெக்டர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

காரைக்கால் மாவட்ட கல்வி அதிகாரி ராஜசேகரன், பெருந்தலைவர் காமராஜ் கல்வி கல்லூரி முதல்வர் கிருஷ்ணபிரசாத், பெட்காட் நுகர்வோர் அமைப்பின் பிரதிநிதி வக்கீல் திருமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் சிறுதானியங்களின் சிறப்பை விளக்கும் வகையில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு வினாடி-வினா, பேச்சு போட்டி மற்றும் சமையல் போட்டி நடத்தப்பட்டது.

சமையல் போட்டிக்கு மதர் தெரசா நர்சிங் கல்லூரி முதல்வர் ஜெயபாரதி மற்றும் ஆசிரியர் ராஜு ஆகியோரும், வினாடி வினா போட்டிக்கு இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் தேசிய ஆட்சி மன்ற கவுன்சில் உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் ராஜதுரை ஆகியோரும், பேச்சுப்போட்டிக்கு அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமூகவியல் பேராசிரியர் சிவக்குமார், பெட்காட் நுகர்வோர் அமைப்பின் தலைவர் திருமுருகன், அரசு பள்ளி ஆசிரியர் குருமூர்த்தி ஆகியோரும் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்