ஓட்டல்களில் கெட்டுபோன மீன், கோழி இறைச்சி பறிமுதல்
காரைக்காலில் 3-வது நாளாக சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஓட்டல்களில் விற்பனைக்காக வைத்திருந்த கெட்டுப்போன மீன், கோழி இறைச்சியை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.
காரைக்கால்
ஓட்டல்களில் விற்பனைக்காக வைத்திருந்த கெட்டுப்போன மீன், கோழி இறைச்சியை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர்.
3-வது நாளாக சோதனை
காரைக்கால் மாவட்டத்தில் பல ஓட்டல்களில் கெட்டுபோன இறைச்சி, கோழி, மீன், சப்பாத்தி, பரோட்டா, நூடுல்ஸ், பொறித்த கோழி, மாவு வகைகளை பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் கடந்த 2 நாட்களாக புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை அதிகாாிகள் கடந்த 2 நாட்களாக காரைக்காலில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது ரசாயன கற்களால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம், வாழைப்பழத்தை கண்டுபிடித்து அழித்தனர்.
கெட்டுப்போன மீன், கோழி இறைச்சி
இன்று 3-வது நாளாக காரைக்கால், திருநள்ளாறு, நெடுங்காடு உள்ளிட பகுதிகளில் உள்ள பிரபல ஓட்டல்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
நெடுங்காடு பகுதியில் இயங்கி வந்த பிரபல ஓட்டலில் ஆய்வு செய்தபோது, பல நாட்களாக பிரிட்ஜில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்த கெட்டுப்போன, மீன், கோழி இறைச்சி, சப்பாத்தி, பரோட்டா, மாவு வகைகள் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மனிதாபிமானத்தோடு...
இதை நீங்களோ, உங்கள் குடும்ப உறுப்பினர்களோ சாப்பிடுவீர்களா?, கொஞ்சமாவது மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ளுங்கள் என எச்சரித்து பறிமுதல் செய்த இறைச்சி, உணவு வகைகளை பினாயில் ஊற்றி அழித்தனர்.
இது போன்ற தவறு இனி நடந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.