மணல் அள்ளிய பொக்லைன் எந்திரம் பறிமுதல்

கோட்டுச்சேரி வாய்க்காலில் அனுமதியின்றி மணல் அள்ளிய பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-06-16 16:48 GMT

கோட்டுச்சேரி

கோட்டுச்சேரி வாய்க்காலில் அனுமதியின்றி மணல் அள்ளிய பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மணல் திருட்டு

கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமாக ஒண்டித்தோப்பு கன்னி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் நேற்று சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சிவநேசனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், ஆணையர் சிவநேசன், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுடன் ஒண்டித்தோப்பு கன்னி வாய்க்காலுக்கு சென்றார். அப்போது சிலர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள மணலை அள்ளி கரையோரம் மலைபோல் குவித்து வைத்திருப்பது தெரியவந்தது.

பொக்லைன் எந்திரம் பறிமுதல்

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரை சேர்ந்த சையது பீராணி என்பவர் அரசு அனுமதியின்றி மணல் எடுத்தது தெரியவந்தது. இது குறித்து கொம்யூன் ஆணையர் சிவநேசன் கோட்டுச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் மற்றும் கரையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்த மணலை பறிமுதல் செய்தனர். மணல் திருட்டில் ஈடுபட்ட சையது பீராணியை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்