துணை கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி முயற்சி

கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்காததால் துணை கலெக்டர் அலுவலகத்த்தில் கோர்ட்டு ஊழியர்கள் இன்று ஜப்தி செய்ய முயன்றனர்.

Update: 2023-09-06 17:18 GMT

காரைக்கால்

கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்காததால் துணை கலெக்டர் அலுவலகத்த்தில் கோர்ட்டு ஊழியர்கள் இன்று ஜப்தி செய்ய முயன்றனர்.

இழப்பீடு தொகை நிலுவை

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பகுதியில் மத்திய அரசின் கோவில் நகர திட்டத்தின் கீழ், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை புதுச்சேரி அரசு கையகப்படுத்தியது. விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று காரைக்கால் மாவட்ட கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.

ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும், விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை அரசு வழங்காததால், காரைக்கால் மாவட்ட துணை கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய காரைக்கால் கோர்ட் உத்தரவிட்டது.

ஜப்தி முயற்சி

இதனையடுத்து இன்று கோர்ட்டு ஊழியர்கள், துணை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய வந்தனர். அப்போது துணை கலெக்டர் ஜான்சன், 2 மாதத்திற்குள் புதுச்சேரி அரசு சார்பில் உடனடியாக விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்குவதாக உறுதி அளித்தார். இதனை அடுத்து அவர்கள் ஜப்தி முயற்சியை கைவிட்டு திரும்பி சென்றனர்.

மாவட்ட துணை கலெக்டர் அலுவலகத்தை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்