பள்ளி மாணவிகள் கள ஆய்வு
காரைக்கால் அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட மேல்நிலைக்கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி தலைமையில் இந்திய உணவு கழக குடோனில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
காரைக்கால்
இந்திய உணவு கழகம் விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பது மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் காரைக்கால் அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 11, 12-ம் வகுப்பு மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட மேல்நிலைக்கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி தலைமையில் காரைக்காலில் உள்ள இந்திய உணவு கழக குடோனில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது இந்திய உணவு கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்புகள் குறித்து மேலாளர் முரளி விளக்கினார். மேலும் மாணவிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியின்போது உணவு பாதுகாப்பு கழகத்தின் மேலாளர் அபினேஷ் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.