மரக்கன்று நடுவிழா

புதுவை ஆண்டியார்பாளையத்தில் மரக்கன்று நடுவிழாவில் சபாநாயகர் செல்வம் பங்கேற்றார்.;

Update:2023-08-10 22:12 IST

அரியாங்குப்பம்

புதுச்சேரி மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக சுதந்திர இந்தியாவின் 75-ம் ஆண்டு அமுதப் பெருவிழா நிறைவை முன்னிட்டு 'என் மண் என் தேசம்' இயக்கத்தின் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடுவிழா ஆண்டியார்பாளையத்தில் நடந்தது. சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து 75 மரக்கன்றுகளை நட்டார்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் நாக கார்த்திகேயன், நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி முருகன், ஆண்டியார்பாளையம் துணை சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி மினு, பள்ளி தலைமை ஆசிரியர் விவேகானந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்