விவசாயிகளுக்கு நெல் விதைகள் விற்பனை

புதுவையில் விவசாயிகளுக்கு நெல் விதைகள் விற்பனை செய்யப்படுகிறது.;

Update:2023-08-07 22:50 IST

புதுச்சேரி

புதுவை கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒருங்கிணைந்த சான்றுவிதை, உற்பத்தி திட்டத்தின்கீழ் புதுவை பகுதி விதை, நெல் சாகுபடி விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட சம்பா நெல் பருவத்துக்கு தேவையான நெல்ரக விதைகளான வெள்ளை பொன்னி, பொன்மணி, சம்பா மாசூரி மற்றும் பாபட்லா5204 சான்று விதைகள் விவசாயிகளுக்கு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே விவசாயிகள் தங்கள் பகுதியில் செயல்படும் உழவர் உதவியகங்களை அணுகி தாங்கள் சாகுபடி செய்ய உள்ள நில அளவிற்கு பரிந்துரைக்கப்படும். சம்பா நெல் விதைகளை மானிய விலையில் பெற்றுக்கொள்ள அனுமதி சான்றை பெற்று அருகில் செயல்படும் திருக்காமீஸ்வரர் உயர் தொழில் நுட்ப வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம், நெல் சாகுபடியாளர்கள் குழு-ஆத்மா, நெட்டப்பாக்கம் ஆகிய விற்பனை மையங்களில் சம்பா சான்று நெல் விதைகளை வாங்கி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் நெல்விதை வாங்கியதற்கான விற்பனை ரசீதை சம்பா நெல் உற்பத்தி ஊக்கத்தொகை, கோரும் (பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன்) ஆவணங்களை இணைத்து எதிர்வரும் அக்டோபர் மாதம் 30-ந்தேதிக்குள் உழவர் உதவியக அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்